இந்நூலில் ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரை ‘தேரி’ என்றால் என்ன என்பதனை விளக்கம் வகையில் அறிமுகமாக அமைந்துள்ளது. பனையண்ணன் நாவலும் இனவரைவியலும் என்ற இரண்டாவது கட்டுரை நாவல் இலக்கியத்தை இனவரைவியலோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கூறுவதாய் காணப்படுகிறது. ‘தேரிக்காட்டு கள்ளர் வெட்டுத்திருவிழா’ என்ற மூன்றாவது கட்டுரை நாட்டுப்புறவியல் மற்றும் மானுடவியல் சார்ந்ததாய் திகழ்கிறது. நான்காவது மற்றும் ஐந்தாவது கட்டுரைகள் தேரிக்காட்டில் மறைப்பணியோடு தமிழ்ப்பணியையும் செவ்வனே செய்த தமிழ்த் தொண்டர் கால்டுவெல், தமிழ் வளர்த்த ஜி.யூ. போப் இருவரைப் பற்றிய பன்முகப் பார்வையோடு திகழ்கின்றன. ஆறாவது மற்றும் ஏழாவது கட்டுரைகள் தற்காலத்து தேரிக்காட்டு இலக்கிய கர்த்தாக்களான தாமரை செந்தூர் பாண்டி, நெல்லை கவிநேசன் ஆகிய இருவரது இலக்கியப் படைப்புத்திறன் மற்றும் மண்மணம் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்திக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.
Be the first to rate this book.