மத்திய கிழக்கு நாடுகளின் இலக்கியங்களை எழுதி வரும் எச்.முஜீப் ரஹ்மான் தக்கலையை சார்ந்தவர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இவர் படைப்பு, ஆய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முகதிறமை உடையவர். நாவல், சிறுகதை, ஆய்வு, விமர்சனம் என்று பல நூற்களை எழுதியுள்ளார்.கோட்பாடுகளிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட இவர் நூல்கள் பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு துணை வகிக்கிறது. முதுகலை மேலாண்மை துறை பேராசிரியரான இவர் பன்மொழி தெரிந்தவராக, பல நாடுகளில் நீண்டகாலம் பணிபுரிந்திருக்கிறார்.பல நாடுகளில் பல்கலைக்கழகங்களில் இலக்கிய உரை நிகழ்த்தியிருக்கிறார். சூபித்துவத்தில் நம்பிக்கையுடைய இவர் உலகமுழுவதும் உள்ள சூபி அறிஞர்களுக்கு பரிசயம் உடையவர். இந்த நூலில் அறியப்படாத பெருநிலத்தை அதன் குணத்துடன் இலக்கியத்தின் ஆழ அகலங்களை, எழுத்தாளுமைகளை உங்களுடன் உறவாடவைக்கிறார். பிரதியின் இன்பம் வாசக அனுபவமாக மாறும் தருணம் உருக்கொள்கிறது.
Be the first to rate this book.