வரலாற்றுப் புதினம் என்பது ஒரு இனத்தினுடைய, ஒரு காலகட்டத்திலு நிகழ்ந்த சம்பவங்களைச் சான்றுகளுடனும், கால, புள்ளி விவரங்களுடனும் கூறுவது மட்டு மாகாது. சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தருகிற புள்ளி விவரங்கட்குப் பின்னே ஒளிந்திருக்கிற அந்த இனத்தின் வீழ்ச்சிக்கான தன்மைகளையும், சூழ்நிலைகளையும், எப்படித் தாழ்வுற்றார்கள். எங்ஙனம் உறங்க வைக்கப்பட்டார்கள் என்பதையும் நிகழ்கால சமூகத்திற்கு எடுத்துக்காட்டி விழிப்படைய வைப்பதே ஒரு நல்ல வலாற்றுப் புதினம் - அத்தகைய புதினங்களைப் படைப்பது எப்படி என்பதற்குக் கலைஞரவர்கள் இந்நாவலின் மூலம் இலக்கணம் வகுத்துத் தந்திருக்கிறார்கள்.
Be the first to rate this book.