ஒரு நிலத்தில் உழன்று வாழும் மனிதர்களுக்கு அந்த நிலத்தில் விளையும் பொருளே உணவு, மருந்து. இயற்கை அப்படித்தான் இந்த பிரபஞ்சத்தை நெய்து வைத்திருக்கிறது. இன்று அந்த உணவுப்பண்பாடும் சுழற்சியும் தனித்தன்மையும் அழிந்துவிட்டன. உணவின் தனித்தன்மை மறைந்து எல்லாம் எல்லா இடத்திலும் கிடைக்கிறது.
மூன்றாம் நிலை குறு நகரங்களில்கூட பர்கரும் பீட்சாவும் வந்துவிட்டன. ஆனாலும் இந்த இடர்களையெல்லாம் தாண்டி இன்னும் மண்ணுக்கேயுரிய வட்டார உணவுகள் கொஞ்சமேனும் உயிர்த்திருக்கவே செய்கின்றன.
யாரோ ஒரு மனிதர், தலைமுறையாக அவற்றைக் கட்டிக்காக்கிறார். பாரம்பர்ய ருசி குறையாமல், செய்முறை மாறாமல் விடாப்பிடியாக அதைச் காப்பாற்றி மக்களுக்கு வழங்கிக்கொண்டுதான் இருக்கிறார். அது அந்த ஊருக்கே அடையாளமாக இருக்கிறது.
அப்படி தென்னிந்தியா முழுவதும், ஊருக்கு அடையாளமாக இருக்கிற உணவுகளைத்தேடி மேற்கொண்ட மிக நீண்ட பயணத்தின் அனுபவத் தொகுப்புதான் இந்த நூல்.
Be the first to rate this book.