'தென்னிந்திய இனவரைவியல் குறிப்புகள்' (Ethnographic Notes In Southern India) எனும் பெரும் திரட்டு 1904ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இன்றைய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா போன்ற பகுதிகளில் வாழ்ந்த பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களிடம் நிலவிய பலவிதமான சடங்குகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், அடிமை முறைகள் போன்றவற்றை ஆராய்ந்து இதில் எழுதியுள்ளார் எட்கர் தர்ஸ்டன்.
அந்தத் திரட்டிலிருந்து 'தென்னிந்திய ஈமச் சடங்குகள்' என்னும் இந்தப் பகுதியை மொழிபெயர்த்திருக்கிறார் வானதி. பழங்குடியினர் முதல் பிராமணர்கள் வரை தென்னிந்தியாவின் பல்வேறு இனப் பிரிவு மக்களின் ஈமச்சடங்குகள் விளக்கமாக இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு மனிதனின் இறப்புக்குப் பிறகு அவருடைய ஆன்மா மேன்மை அடையும் பொருட்டுச் செய்யப்படும் ஈமச் சடங்குகளில் இருக்கும் நுணுக்கங்களும் அவற்றின் அர்த்தங்களும் வியப்பூட்டுவதாக இருக்கின்றன. நம் பாரம்பரியத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமானவை என்று புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் நமக்கு உதவுகிறது.
Be the first to rate this book.