‘இது தென்னிந்தியா மீது நடைபெற்ற இஸ்லாமியர்களின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கும் ஓர் அரிய புத்தகம். தென்னிந்தியாவில் இன்னும் கோயில்கள் இருப்பதால், அங்கு இஸ்லாமியர்களின் தாக்குதல்கள் நடைபெறவில்லை. அல்லது அவை மிகக் குறைவாகவே நடந்துள்ளன என்று பலர் கருதுகின்றனர். டெல்லி சுல்தானகத்தால் தென்னிந்தியா எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை இந்த அருமையான புத்தகம் கூறுகிறது’ என்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற வரலாற்று ஆசிரியர் மீனாட்சி ஜெயின்.
இந்நூலை எழுதிய எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் வரலாறு, தொல்லியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அரசியல் சாய்வுகளின்றி, தகுந்த ஆதாரங்களோடும் ஏற்கத்தக்க வாதங்களோடும் இஸ்லாமியப் படையெடுப்புகளின் வரலாற்றை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார்.
சோழப் பேரரசின் வீழ்ச்சியில் தொடங்கி தக்காணத்தில் நடந்த முகமதியர்களின் படையெடுப்புகள், கில்ஜிக்களின் ஆட்சியில் நடைபெற்ற அழிவுகள், துக்ளக்கின் படையெடுப்புகள் என்று விரிந்து செல்கிறது இந்நூல். இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய நூல்களுள் ஒன்று என்று இதனைச் சொல்லமுடியும்.
Be the first to rate this book.