இன இயல் ஆய்வாளர்களால் பெரிதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மத்திய இந்தியாவைச் சேர்ந்த கோன்ட் பழங்குடிகள் தொடங்கி, இன்றளவும் இனவியல் ஆய்வாளர்களுக்குப் புதிரானவர்களாக உள்ள தென் தமிழ் நாட்டைச் சேர்ந்த கோட்டை வேளாளர் வரையிலான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினரையும் சாதியினரையும் பற்றிய விவரங்கள் இதனுள் தொகுக்கப்பட்டுள்ளன.
வழக்கு வரலாறுகள், நாட்டார் கதைகள், புராண இதிகாசங்கள், பண்டைய இலக்கியங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள், ஆவணங்கள், கையேடுகள், பயணக் குறிப்புகள், அறிக்கைகள், இதழ்கள் ஆகிய அனைத்திலிருந்தும் இன இயல் தொடர்பான செய்திகள் திரட்டியளிக்கப்பட்டுள்ளன.
1. முதல் தொகுதியில், ‘அபிசேகர்’ முதல் ‘பயகர’ வரையான தலைச்சொற்களுக்கு விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
2. இரண்டாவது தொகுதியில், கஞ்சி முதல் ஜீங்கு வரையான சொற்களுக்கு விளக்கங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
3. மூன்றாவது தொகுதியில், கப்பேரர் முதல் குறவர் வரையான சொற்களுக்கு விளக்கங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
4. நான்காவது தொகுதியில், கோரி முதல் மரக்காலு வரையான சொற்களுக்கு விளக்கங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
5. ஐந்தாம் தொகுதியில் ‘மரக்காயர்’ முதல் ‘பள்ளர்’ வரையுள்ள சொற்களுக்கான விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
6. ஆறாம் தொகுதியில் ‘பள்ளி (அல்லது) வன்னியன்’ முதல் ‘சிரியன் கிறித்தவர்’ வரையுள்ள சொற்களுக்குரிய விளக்கங்கள் தொகுத்தளிக்கப்பெற்றுள்ளன.
7. ஏழாம் தொகுதியில், ‘தாபேலு’ முதல் ‘சொன்னல’ வரையுள்ள சொற்களுக்கு விளக்கங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.