தென்னிந்திய கிராமங்களைப் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் அனைத்தும் எனது சுயமான கிரகிப்பு மற்றும் விசாரணையால் சேகரிக்கப்பட்டவை. புத்தகங்களில் இருந்து சிறிதளவே என்னால் பெறமுடிந்த நிலையில், இதுதான் இந்திய மதம் பற்றி இத்தகைய அம்சத்தில், முறையாகச் செய்யப்பட்ட முதல் முயற்சி என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் கிராம தெய்வங்களுக்கான பல்வேறு சடங்குகள் அனைத்தையும் களைத்துப் போகும் அளவு திரட்டிவிட்டது போல பாவனை எதையும் இது செய்யவில்லை. தென்னிந்தியாவின் வெவ்வேறு மாவட்டங்களில், உள்ள வகை வகையான சடங்குகளுக்கு முடிவே இல்லை என்ற சூழலில், எனது சொந்த அறிவுக்கு இந்த அனைத்து வகை சடங்குகளுமே கணக்கில் கொள்ளப்பட்டுவிட்டன என்று காட்ட நான் முயற்சிக்கவில்லை. ஆகவே “தென்னிந்திய கிராமக் கடவுள்கள் பற்றிய ஆய்வுக்கான ஓர் அறிமுகம்” என்று இந்து நூலைக் கூறுவது ஒருவேளை இன்னும் சரியாக இருக்கலாம்.
- ஹென்றி ஒயிட்ஹெட்
Be the first to rate this book.