எல்லா வகையான மனிதர்களையும் நாலாவிதமான மொழியினரையும் கட்டியாண்ட திப்பு சுல்தானின் சிறப்புகளைப் பற்றி பல நூல்கள் வந்துள்ளன.
மதச்சார்பின்மையின் அடையாளமாக திகழ்ந்த திப்பு மனிதரல்லர், மாமனிதர். அவர் மன்னரல்லர், மாமன்னர் எனச் சொல்ல அவருடைய வாழ்வியலிலும் அரசியலிலும் பல சான்றுகள் உள்ளன. அவருடைய பார்வை குறுகிய பார்வையல்ல, நீண்டபார்வை, ஆழமான பார்வை என்பதற்கு பெண்களுக்கான நன்மைகளையும் சமூக நீதிக்கான செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியதின் மூலம் அறியலாம்.
அவருடைய அகப்பார்வையும் முகப்பார்வையும் விரிந்த விவேகமான பார்வைகள் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது. அவருடைய தொலை நோக்கியில்லாத தொலைதூரப் பார்வையை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது.
அரபுக்கடல் தாலாட்டும் மஸ்கட்டிலிருந்து அட்லாண்டிக் கடல் தாலாட்டும் மொரோக்கோ வரை பார்வையைச் செலுத்தி விரிந்த உலகைக் கண்ட மனிதநேயர் திப்பு.
Be the first to rate this book.