அப்படியே சொல்வது மாதிரி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றை விடவும் கூடுதலாகச் சொல்கிறது. அந்த மனிதர்கள் நீங்களும் நானும் பேசுவது போலத்தான் பேசுகிறார்கள். ஆயின், நாம் எதைப் பேசாமல் இருக்கிறோமோ அதை எல்லாம் அவர்கள் பேசிவிடுவதை உணரமுடிகிறது.
வாழ்வும், மனிதர்களும், பசியும், காமமும் வசப்பட்ட மனத்திற்குத்தான் இப்படியொரு தீர்மானமிக்க மொழி பிடிபடும். ஒத்திகை பார்க்காத, பாசாங்கு காட்டாத, வெயில் மாதிரி நகர்ந்து, நிழல் மாதிரி விழுந்துகொண்டிருக்கும் எழுத்து. தவிர்க்க, புறக்கணிக்க, ஒதுக்கித்தள்ள இயலாத, பதில் சொல்ல வைக்கிற படைப்பு மொழி, நல்ல கலையின் கூர்ந்த வசீகரத்தை யாரும் அலட்சியப்படுத்திவிட்டுத் தாண்டிப்போக முடியாது.
கீரனூர் ஜாகிர்ராஜா அப்படி ஒரு கலைஞன். தமிழ் இலக்கிய வரைபடத்தில் கீரனூரும் மீன்காரத் தெரு ஒன்றும் நிலைநிறுவப்பட்டது அதனால்தான்.
— வண்ணதாசன்
Be the first to rate this book.