மிகுந்த விரியமுடைய எழுத்து இவ்வளவு எளிமையாகத்தான் இருக்கும்.மிகுந்த தீவிரமான படைப்பாளி இத்தனை அமைதியுடனே இயங்கிக்கொண்டு இருப்பான். மத்தியில் நடப்பதை விளிம்பில் நடப்பதை மத்தியில் இருந்தும் ஆவதானிக்கிறவனின் குரல் இப்பிடித்தான் உயரவும்தாழவும் செய்யாது. அப்பிடிபயே சொல்வது மாதிரி இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றை விடவும் கூடுதலாகச் சொல்கிறது. அந்த மனிதர்கள் நீங்களும் நானும் பேசுவது போலத்தான் பேசுகிறார்கள். ஆயின்,நாம் எதைப் பேசாமல் இறுக்கிறோமோ அதை எல்லாம் அவர்கள் பேசிவிடுவதை உணர முடிகிறது. வாழ்வும் மனிதர்களும்,பசியும் காமமும் வசப்பட மனத்திற்குத்தான் இப்பிடியொரு தீர்மானமிக்க மொழி பிடிபடும். ஒத்திகை பார்க்காத, பாசாங்கு காட்டாத,வெயில் மாதிரி நகர்ந்து நிழல் மாதிரி விழுந்து கொண்டிருக்கும் எழுத்து, தவிர்க்க, புறக்கணிக்க, ஒதுக்கித் தள்ள இயலாத, பதில் சொல்லவைக்கிற படைப்பு மொழி. நல்ல கலையின் கூர்ந்த வசீககரத்தை யாரும் அலட்சியப்படுத்திவிட்டுத் தாண்டிப் போகமுடியாது. கீரனுர் ஜாகிர்ராஜா அப்படி ஒரு கலைஞன், தமிழ் இலக்கிய வரைப்படத்தில் கீரனூரும் மீன்காரத் தெருவொன்றும் நிலை நிறுவப்பட்டது அதனால்தான்.
Be the first to rate this book.