வடிவங்களாலும், படிமங்களாலும் நம்மை மிரட்டாமல், மிக எளிமையான மொழியால் ஆனாது கவிஞர் உதயசங்கர் கவிதைகள். உச்சந்தலையில் விழுந்து நம்மை நனைக்கும் மழையைப் போல், இதமாக இருக்கும் உதயசங்கரின் முதல் தொகுப்பு ‘தீராது’
என்ன தெரியும்?
‘‘கிள்ளி விட்டதும் நீ
தொட்டிலாவதும் நீ
சின்னக் கருப்பனுக்கு
என்ன தெரியும்
அழுவதைத் தவிர’’
எனவே, முதல் தொகுதியைப்போல் எளிமையும், நேரடித் தன்மையுமான கவிதைகள் இத்தொகுப்பிலும் உண்டு, எனினும் புதிய படிமங்களால் வியக்கவும் வைக்கிறார். கணவன் மனைவிக் கிடையேயான ஏமாற்றுதலை ஒரு எளிய பகடியின் மூலம் சாடிச் செல்கிறார்.
‘‘மழை பெய்த இரவின்
ஈசல்களாய்
உன் நினைவுகள்
மயக்கும் அரிக்கேன்
விளக்கொளியில்’’
Be the first to rate this book.