யோகரட்ணம் அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் எனும் சிறு கிராமத்தில் உள்ள ‘கல்வளை கேணிக்கட்டு’ எனும் குறிச்சியில் இராமன். அன்னம் தம்பதிகளின் நான்காவது பிள்ளையாக 1952 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதிலிருந்தே, சமூக, அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதற்கான சூழலுள்ள உள்வாங்கப்படும் இயல்பை “தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்” இப்பிரதியிலுள்ள ஒவ்வொரு ‘தலைப்புகளும்’ நாம் அறிகின்றோம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமானது எமது சமூகத்தில் நிலவும் சாதிய அமைப்பு முறைகளை தொடர்ந்து தக்கவைக்கும் தன்மையுடையதாகவே அதனது செயல்பாடுகள் இருந்து வந்துள்ளதென்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தவர் யோகரட்ணம். இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை என்பது இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களையும், அவர்களது நலன்களை உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வருபவர்.
Be the first to rate this book.