மிகவும் கடினமான சூழநிலையிலுள்ள தீண்டப்படாதோரைக் கண்டு அனைவரும் இவ்வாறுதான் ஆரம்பிக்கிறார்கள் - "தீண்டப்படாதோருக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும்". ஆனால் இந்த பிரச்சனையில் அக்கறை உள்ள யாரும் இந்துவை மாற்ற நாம் ஏதாவது செய்வோம் என்று சொல்லிக் கேட்டதேயில்லை. தீண்டப்படாதோர்தான் சீர்த்திருத்தப்பட வேண்டியவர்கள் என்று சிந்திப்பது வழக்கமாகிவிட்டது. தீண்டாமை ஏதோ தீண்டப்படாதோரின் தவறால், குறைப்பாட்டினால் ஏற்பட்டது போலவும், தீண்டப்படாதவர்தான் அவர்களின் நிலைக்குக் காரணம் என்பது போலவும் பேசுவதும் வழக்கமாகிவிட்டது. ஏதாவது பணி, இயக்கம் தேவைப்படுகிறதென்றால் அது தீண்டப்படாதோருக்குத்தான் தேவை, இந்துவை பொறுத்தவரை அவன் செய்ய வேண்டியது எதுவுமில்லை. அவன் மனரீதியாகவும் பழக்கவழக்கங்கள், ஒழுங்கு ஆகியனவற்றைப் பொறுத்தவரையும் மிகச் சரியாகவே இருக்கிறான், அவன் முழுமையானவன், அவனிடம் எந்த குறையும் இல்லை. அவன் பாவியல்ல என்றே பலர் நினைக்கின்றனர்.
- பாபாசாகேப் அம்பேத்கர் (தொகுதி 9, ப. 144)
Be the first to rate this book.