இந்தக் காலத்திலும் பூர்வகுடிகளை வெறும் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தும் அரசியலற்ற ஆராய்ச்சியாளர்கள்போல, கலையை வெறும் சமயஞ் சார்ந்த, பாலியல் சார்ந்த, வெற்று வார்த்தைகள் நிரம்பிய மாயப் புனைவுகளாகச் சுருக்கி, அதன் வழியாக அதீத, அபத்தப் போலியானப் பாத்திரப் படைப்புகளையும், முதலாளித்துவ ஒழுக்கநெறியை போதிக்கும் பிற்போக்கான எழுத்துகளையும் பரப்புவதையே முழுநேரத் தொழிலாகக்கொண்டு, ஆளும்வர்க்கத்திற்கு ஆதரவான சித்தாந்தங்களை, பண்டைய ஆன்மீகக் கழிவுகளை, அரசனுக்கு கட்டுப்பட்டு இருப்பதே விசுவாசம் என்பதுபோன்ற இழிவுகளை உயர்த்திப்பிடித்து அதையேச் சுற்றிச்சுற்றி அழகியலாக வடித்து, அவை மட்டுமே தொன்றுதொட்டு வருபவை என்று கதைகளையும், கல்லாவையும் கட்டுபவர்கள் இந்தக் கதைகளைப் படித்து மனச் சஞ்சலமடைந்தால் அதற்கு முழுபொறுப்பும் நான் மட்டும்தான்; என் நோக்கமும்கூட அதுதான்.
Be the first to rate this book.