நீங்கள் உங்கள் வேலையைச் சிறப்பாகத்தான் செய்கிறீர்கள். ஆனால், நீங்கள் நிஜமாக வெற்றி அடைய வேண்டு-மெனில், அதை மட்டுமே செய்தால் போதாது. பிற விஷயங்-களையும் கவனத்தில் கொண்டு செய்ய வேண்டும். முக்கிய-மாக, வேலைக்-கான விதிகளை நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், மற்றவர்கள் தங்கள் வேலையைக் கண்ணும் கருத்துமாகச் செய்து கொண்டிருக்கும்போது, நீங்கள் மட்டும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற முக்கியமான விதிகளின் உதவியோடு உங்கள் வேலையை வெற்றிகரமாக முடித்து பதவி உயர்வு என்னும் ஏணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பீர்கள். உங்கள் வேலையில் வெற்றி பெற, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல, அந்த வேலையை எப்படிச் செய்ய வேண்டும், உங்கள் செயல்பாட்டை மற்றவர்கள் எப்படிப் பார்க்க வேண்டும், வேலை நேரம் தவிர, மற்ற நேரத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த விதிகள் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லும். இந்த விதிகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலமே உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். வேலை என்று வரும்போது மற்றவர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால், நீங்கள் மிகச் சிறந்தவராக, தவிர்க்க முடியாதவராக இருக்க வேண்டும். வாழ்க்கையில் மிகப் பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று விரும்பி, அதை அடையும் வழி தெரியாமல் தவிப்பவர்களின் கண்களைத் திறக்கக்கூடியதாக இந்தப் புத்தகம் நிச்சயம் இருக்கும்”. சர் ஆண்டனி ஜாய், ‘யெஸ், மினிஸ்டர்’ புத்தகத்தை எழுதிய ஆசிரியர், வீடியோ ஆர்ட் லிமிட்டெட்டின் நிறுவனர்
Be the first to rate this book.