ஓம் சாஸ்திரி தன்னுடைய கடந்தகாலம் குறித்த வினாக்களுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறார். ‘மிருத சஞ்சீவினி’ நூல் தீய சக்திகளால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், நல்ல சக்திகளால் வெற்றி பெற முடியுமா? மிருத சஞ்சீவினி தவறான கைகளில் சிக்கிவிட்டால் அது பெரும் குழப்பத்தையும் அழிவையும் ஏற்படுத்தக்கூடும் என்று கூறும் அளவுக்கு அதில் எப்படி என்ன இரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன? யார் இந்த ஓம் சாஸ்திரி? யார் இந்தப் பரிமலும் லிசாவும்? பிற சிரஞ்சீவிகள் எங்கே மறைந்திருக்கின்றனர்? பல புதிரான இடங்களில் அப்படி என்ன வார்த்தைகள் மறைந்து கிடக்கின்றன? அவற்றை நாகேந்திரர் ஏன் சேகரித்துக் கொண்டிருக்கிறார்? எப்போதும் இணைந்தே செயல்படுகின்ற மூன்று சிரஞ்சீவிகளும், ‘மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இறவாமை’ என்பதைவிட மிக உயர்ந்ததொரு நோக்கத்தைக் கொண்டிருக்கின்ற வார்த்தைகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ‘மறைந்திருக்கும் இந்து’ நூலின் இந்த இரண்டாம் பாகத்தில், நீங்கள் இதுவரை பயணித்திராத இடங்களை உள்ளடக்கிய, பரவசமூட்டும் ஒரு பயணத்திற்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகுங்கள்.
Be the first to rate this book.