நாம் அன்பிலானவர்கள். அன்புக்கான உள்ஏக்கம் கொண்டவர்கள். அதிலிருந்து நம் எதிர்பார்ப்புகள் வழுவும்போது நமக்குள் ஏற்படும் மனக்கொந்தளிப்புகள் நம்மை இயல்பிழக்கச் செய்கின்றன. எத்தனையோ வலிகளை, வேதனைகளை நம் பார்வையில் உணர்ந்து, நம்மோடிருந்து நாம்தான் இவர் என்று உணரச் செய்தவர்களை ரணப்படுத்தி ரசிக்கச் செய்கிறது மனித மனம். உண்மையில் ஆழ்மனம் சாதுவான நிலையில் செயல்பட்டாலும் அந்தந்த நேரச் சிந்தையின் போக்கில் வன்மமும் வெறியும் பெருக வரிகள் கவிதைகளாகின்றன. இவை நான் உணர்ந்தவை. அன்பும் காலமும் மரணமும் என் கவிதைகளில் எப்போதும் இருந்து என் வாழ்புலத்தை சலனப்படுத்தியபடியே இருந்து வருகின்றன.
- பொன். வாசுதேவன்
Be the first to rate this book.