எல்லா பெண்தெய்வங்களும் தன்னின் உறவாய்ப் பார்க்கிறாள், தவ்வை. கொற்றவைதான் தன் தாயென உணர்கிறாள். பெண்ணின் துயரம் பெண்தெய்வங்களுக்குத் தெரியும். இந்த நூலில், திருநெல்வேலி வட்டார வழக்கு மிக அழகுடன் உரையாடலில் மேலெழுந்து வருகிறது. பெண்களின் வழக்கங்கள் பற்றிய அவதானிப்பு நம்மை ஈர்க்கின்றன. வெளிப்படையாகப் பகிர்ந்து சகஜம் கொள்ளமுடியாத சூழல், பெண்ணின் இயல்பான ஆளுமையைச் சிதைத்து ஒருவித மனச்சிக்கலிலேயே இருத்தியிருக்கும் துயரத்தை இந்த நாவலில் விவரிக்கிறார், அகிலா.
Be the first to rate this book.