"தட்டழியும் சலதி"க்கான விதை எப்பொழுது எனக்குள் விழுந்தது என்பதை என்னால் சரிவர கூற இயலவில்லை. ஒருவேளை நான் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் வசித்து, பள்ளி பயின்ற காலமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனந்தஜோதி டீச்சரும், சுமங்கலி சூப்பர் மார்க்கெட்டும், திலகத்து ஆச்சியும், ஹார்பர் பீச்சும், செல்வம் அண்ணன் கடையும், ஜாய் மேடமும், ஜாஸ்மின் நைட்கிளப்பும், ஜெரால்டும், முத்தம்மா பெரியம்மையும், மாரி அண்ணனும், முத்து அண்ணனும் இங்கு பரமனாக, அறம்வளர்த்தாளாக, சம்பந்தமாக, லவ்லினாக, திலகமாக, மதுசூதனனாக, நெல்லையப்பனாக உருமாறுகிறார்கள். மனித வாழ்வின் தேவை மற்றும் மனித மனதின் விருப்பம் என்னும் இரண்டு படிமங்களுக்கு இடையேயான போராட்டம் தான் இந்த படைப்பின் பாடு பொருள். யாமறிந்த வரையில் அந்த பாடு பொருள் சரிவர பேசப்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.
-கோமதிராஜன்
Be the first to rate this book.