ஒழுங்கற்ற அமைப்பாலும்
பாசாங்கற்ற செயல்களாலும்
பேரழகை
தன்னுள் அடைகாக்கும்
கிராமியம்தான்
அகமும் புறமுமான
நமது அசலான வாழ்க்கை
வணிகமயமான சூழலில்
பெருநிறுவனங்களால்
கிராமங்கள்
சூறையாடப்படும் நிலையில்
அந்த எளிய வாழ்வின் எச்சங்களை
ஒப்பனைகளற்ற சொற்களால்
கரிசல் மக்களின் மொழியில்
கவிதைகளாக்கி
ஆவணப்படுத்தியிருக்கிறார்
ஆண்டன்பெனி
Be the first to rate this book.