நாம் அவசியம் எப்படி வாழ வேண்டும்? எது உண்மையில் இருக்கிறது? நாம் அறிந்துகொள்வது எப்படி?
உயிரோட்டமான இப்புத்தகம், எது தத்துவம் அல்லது அது எதற்காக இருக்கிறது என்ற கேள்விகளால் திகைப்படைந்திருக்கும் எவருக்கும் ஆதர்ச அறிமுகமாக விளங்கக்கூடியது.
தத்துவம் என்பது ஏதோ வேறு கிரகத்திலிருந்து கொண்டு செய்யும் வேலையில்லை என்று விவாதிக்கிறார் எட்வர்டு கிரெய்க்: தத்துவத்தைக் கற்றுக்கொள்வதென்பது நாம் ஏற்கனவே செய்து கொண்டிருப்பதை மேலும் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் மேற்கொள்ளும் முயற்சியன்றி வேறில்லை. தத்துவம் என்பது அறிவுரீதியான கேளிக்கை விளையாட்டல்ல என்று கிரெய்க் காட்டுகிறார்: பிளேட்டோ, பௌத்த எழுத்தாளர்கள், தெகார்த்தே, ஹாப்ஸ், ஹியூம், ஹெகல், டார்வின், மில் மற்றும் டி போவா போன்ற சிந்தனையாளர்கள் உண்மையான தேவைகளுக்கும் நிகழ்வுகளுக்கும் எதிர்வினையாற்றி இருக்கிறார்கள் - அவர்களின் பெரும்பாலான சிந்தனைகள் நம் இன்றைய வாழ்வை வடிவமைத்திருக்கின்றன. அவர்களின் பெரும்பாலான அக்கறைகள் இன்றும் நமக்குப் பொருந்துபவை.
Be the first to rate this book.