நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற சில நிதர்சனமான உண்மைகளை இந்நாவல் உரத்துச் சொல்கிறது. முரண்பாடுகள் இல்லை என்றால் சுவாரசியங்கள் இல்லை. மிருகத்தன்மை இல்லை என்றால் மனிதம் இல்லை. நாகரிகத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு மனிதனையும் ஓர் ஆதி மனிதனின் கரிய நிழல் விடாமல் பின்தொடங்கிறது. அந்த நிழலைத்தான் இ.பா. இந்நாவல் மூலம் நமக்கு அடையாளம் காட்டுகிறார். மனித மனப்போராட்டங்களைத் தத்ரூபமாகப் படம் பிடிக்கும் தந்திர பூமி, இ.பா. வின் புகழ் பெற்ற முக்கியப் படைப்புகளுள் ஒன்று. இ.பா. விவரிக்கும் தந்திர பூமி நமக்கு வெளியே இல்லை; உள்ளே. இதிலிருந்து யாரும் அவ்வளவு சுலபத்தில் தப்பிவிட முடியாது.
Be the first to rate this book.