மைதானத்தின் நடுவில் நிற்கும் ஒருவன் நாலாபுறமும் விசிறியடிக்கும் பந்துகளைப் போல, பல்வேறு துறை சார்ந்த அனுபவங்கள் இக்கட்டுரைத் தொகுப்பில் விரவிக் கிடக்கின்றன. இதனினுள்ளே தட்டுப்படுகிற மனிதர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கதையாய் வரைகிறார்கள். ஒரே நாரில் கோர்க்கப்பட்ட வெவ்வேறு மலர்கள். தொட்டிப் பூக்கள் துவங்கி மலையடிவாரக் காட்டுப் பூக்கள் வரை என விதம்விதமான மனிதர்களும் அவர்களின் வாழ்க்கைப்பாடுகளும் இரத்தமும் சதையுமாக தொனியில் பதிவாகியிருக்கின்றன. தள்ளி நிற்கிற பாவனையில் எல்லாமுமாக நிலப்பரப்பொன்றைச் சித்திரமாய் வரைந்திருக்கிறார். கேரை மீனொன்றின் வடிவமாய் அது அமைந்திருக்கிறது.
Be the first to rate this book.