ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 2 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வயது, சாதி, மதம், வர்க்கம், பாலினம் என்று எந்தப் பேதமும் இன்றி இவ்வளவு பேர் தற்கொலையை நாடுவது குடும்பத்துக்கு, சமூகத்துக்கு, ஏன் தேசத்துக்கே ஓர் அபாயகரமான போக்கு. உலகம் தழுவிய அளவில் விரிந்திருக்கும் இந்த முக்கியமான பிரச்னையைத் தீர்க்கவேண்டுமானால் முதலில் தற்கொலை பற்றிய ஓர் அடிப்படை புரிதல் அவசியம்.
· தற்கொலை உணர்வு ஏன் ஒருவருக்கு ஏற்படுகிறது?
· ஆண்கள், பெண்கள் இருவரில் யார் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? ஏன்?
· தற்கொலைக்குக் காரணம் தனி நபர்களா அல்லது சமூகமா?
· மருத்துவம், சட்டம், மதம் ஆகியவை தற்கொலையை எப்படி அணுகுகின்றன?
· உளவியல் ரீதியில் தற்கொலையை எப்படிப் புரிந்துகொள்வது?
· ஒருவருக்குத் தற்கொலை உணர்வு உள்ளது என்பதை மற்றவர்களால் கண்டுபிடிக்கமுடியுமா?
· தற்கொலையைத் தடுக்கமுடியுமா?
தற்கொலை பற்றி இதுவரை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்றுள்ள ஆய்வுகள், திரட்டப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள், நடத்தப்பட்ட விவாதங்கள் ஆகிய அனைத்தையும் தொகுத்துக்கொண்டு இந்த முக்கியமான புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் டாக்டர் எம்.எஸ். தம்பிராஜா.
தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதனைத் தடுத்து நிறுத்துவதும்தான் இந்தப் புத்தகத்தின் தலையாய நோக்கம்.
Be the first to rate this book.