'தற்கொலைக் குறுங்கதை'களின் ஒவ்வொரு எழுத்துமே நம் கலாசாரம் கட்டமைத்து வைத்திருக்கும் புனிதத்தைக் காலில் போட்டு மிதிக்கிறது. பெண்மை, தாய்மை, கற்பு, எழுத்தின் தூய்மை, காதல், கடவுள், மரணம் என்று எல்லாவிதமான புனிதங்களும் இந்த நாவலில் தத்தம் புனிதத்தன்மையை இழந்து நிற்கின்றன. கலைக்குத் தேவையான ஒன்று அராத்துவிடம் உள்ளது. அது, கலையை வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்காமல் கலையையும் வாழ்வின் ஒரு கூறாக அனுபவம் கொள்வது. பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதிர் அழகியலின் கலகக் கலரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைகதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் நடந்ததே இல்லை. அராத்து தனது குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் இதையும் உடைத்துவிட்டார்.
- சாரு நிவேதிதா
Be the first to rate this book.