பல்லாண்டுகால தமிழ்ப் புதுக்கவிதையின் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி சமகால மானுடத்தின் அபத்தப் பிதற்றல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இவரது கவிதைகளில் குழந்தைகள் வரும்போது மட்டும் அராத்து அன்பான தகப்பன் ஆகிறார். மற்ற நேரங்களில் எல்லாம் ஏறி மிதித்துப் போய்க்கொண்டே இருக்கும் புல்டோசர். கரப்பான் பூச்சிகள், காகங்கள், பூரான்கள், வண்ணத்துப் பூச்சிகள், வெட்டுக்கிளிகள் போன்ற உயிரிகள் மட்டும் இவரிடம் சற்று இரக்கம் பெறுகின்றன! வரம் தரும் கடவுளில் இருந்து பாரில் மட்டையாகும் இளம்பெண் வரை எல்லாருக்கும் ஒரே ட்ரீட்மெண்ட்!
- அசோகன் நாகமுத்து
Be the first to rate this book.