மொழி அறக்கட்டளை இந்தத் தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதியை உருவாக்கியுள்ளது. மொழியில் மரபுத்தொடர்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தாலும் அவை கலைச்சொற்கள் போலல்லாமல் பொது மொழியைச் சார்ந்தவை. கருத்தையும், உணர்வையும், கற்பனையையும் வெளியிடும் மரபுத்தொடர்கள், தனிநபர் செயற்பாட்டு நிலையிலிருந்து வளர்ந்து மரபாகப் பொதுவெளியிலும் வழங்குகின்றன.
* தற்காலத் தமிழில் வழங்கும் மரபுத்தொடர்களுக்குப் பொருள் தரும் முதல் அகராதி.
* சுமார் 80,000 அச்சிட்ட பக்கங்களைப் பரிசீலித்து உருவாக்கப்பட்ட தகவல்தளத்தைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.
* தமிழில் மரபுத்தொடரின் இயல்பை உணர்த்தும் தகவல்களைக் கொண்டுள்ளது:
- பதிலீட்டுச் சொற்களை ஏற்பவை
- மாற்று வடிவங்களை ஏற்பவை
- சொற்கள் இடமாற்றம் அடைபவை
- இலக்கண வேறுபாடுகள் அடைபவை
- பின்னொட்டுகளை ஏற்பவை
- பழமொழிகளிலிருந்து பெறப்படும் மரபுத் தொடர்கள்
- பயன்பாட்டுச் சூழல் குறித்த குறிப்பு
- 5,000க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டு வாக்கியங்கள்
- ஆங்கிலத்தில் பொருள்
Be the first to rate this book.