‘தறிநாடா’ நாவல் 1970களிலிருந்த திருப்பூர் நகரத்தின் நெசவாளர் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ போல் எம்.வி.வெங்கட்ராமனின் ‘வேள்வித்தீ’யைப் போல் நெசவுத்தொழிலாளரின் வாழ்க்கைச் சிக்கல்களை எடுத்துரைக்கின்றது.
கொங்கு வட்டாரத்தில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த ‘தேவாங்கர் செட்டியார்’ களின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையை இந்நாவல் பதிவு செய்துள்ளது. மரபான கைத்தறி முறை மாறி விசைத்தறி திருப்பூர் வட்டாரத்தில் நுழைந்ததும் அதனால் கைத்தறி நெசவு நலிந்ததும் இந்நாவலின் பிரச்சினையாக அமைந்துள்ளது. விசைத்தறிகளின் வருகையும் பனியன் கம்பெனிகளின் நுழைவும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பு களை இந்நாவல் அனுதாபத்துடன் சித்திரிக்கின்றது. கைத்தறி நெசவுக்கான கூலி குறைக்கப்பட்டதை எதிர்த்து நெசவாளர்கள் நடத்திய ‘நெசவுக்கட்டு’ என்னும் வேலைநிறுத்தப் பேராட்டம் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, அது மிகப்பெரிய போராட்டமாகத் திருப்பூர் நகரை உலுக்கிய ‘போராட்ட வரலாறு’ இந்நாவலின் மையக்கருவாக அமைகின்றது.
நெசவாளர் போராட்டத்தை இலட்சியப்படுத்தி அற்புதப் புனைவாகக் காட்டாமல், தன்னெழுச்சியாகப் பிறந்த போராட்டத்தின் பலன்களையும் பலவீனங்களையும் நாவலாசிரியர் யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.
Be the first to rate this book.