ஸ்ரீனி எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தின் பெயர், வித்தியாசமானது. காரணம் என்ன என்று புத்தகம் படித்தால் உங்களுக்கும் புரியும். டாரண்டினோவின் மிக முக்கியமான ஒரு திரைக்கதை முறை அது. பொதுவாகத் தற்செயல்களை ஒன்றுக்கு மேல் வைத்தால் அந்தப் படம் அலுத்துவிடும் என்றே திரைக்கதை வித்தகர்கள் சொல்வது வழக்கம். ஆனால் டாரண்டினோவின் படங்களில் சரமாரியாகத் தற்செயல்கள் இடம்பெறும். அவை அலுக்கவும் செய்யாது. இதைப்பற்றி டாரண்டினோவே பலமுறை பேசியிருக்கிறார். ‘திரைக்கதைகள் மூலம் ஆடியன்ஸை நான் நினைத்தபடி ஆட்டுவிப்பேன்’என்பதே அவரது தலையாய மந்திரம். அதை இன்றுவரை மிக வெற்றிகரமாகச் செய்தும் வருகிறார். அதைப்பற்றிய ஶ்ரீனியின் கருத்துகளைப் புத்தகம் எங்கும் காணலாம். இந்தப் புத்தகத்தை நான் எத்தனை வேகமாகப் படித்தேன் என்று சொல்லவே முடியாது. கடகட என்று, படுவேகமாகப் படித்துமுடித்துவிட்டேன். நீங்களும் அவசியம் அப்படித்தான் படிக்கப் போகிறீர்கள்.
- கருந்தேள் ராஜேஷ்
4 guide for Quentin movies
க்வெண்டின் டாரெண்டிணோ திரைப்படங்களின் கதாபாத்திரங்களின் வழி ஒவ்வொரு திரைப்படத்தையும் விரிவாக அலசும் இந்நூல் ரசிகனுக்கு கையேடு என்றே சொல்லலாம். ஒருமுறை க்வெண்டின் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு பின் இந்த கட்டுரையை ஒருமுறை வாசித்தால் புரியும் இதன் அருமை.
Meiyazhakan 31-01-2020 03:14 pm