முற்றிலும் வேறுபட்ட வகையைச் சேர்ந்த, எந்த விதிக்கும் கட்டுப்படாத இந்த நாவல், கதாநாயகன் சுநீலின் வாக்குமூலமாகும். இந்த நாவலில் நிகழ்ச்சிகளைவிட கதாநாயகனின் உள்ளார்ந்த அனுபவங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. கதாநாயகன் காதலை நம்புகிறான். காதலிக்க விரும்புகிறான். இந்த நாவலுக்குத் தேவைப்படுவது கட்டுக்கோப்பு அல்ல, பாத்திரங்களின் ஆளுமையின் மலர்ச்சிதான். கதாநாயகன் தான் பார்த்ததை அப்படியே சொல்கிறான் என்று கூறினால் போதாது. பார்ப்பது பெரிய விஷயமில்லை. பார்த்துக் கொண்டே சுநீலின் ஆளுமை மலர்வதுதான் முக்கியம். இந்த நாவலின் கதையோட்டத்தில் ஓர் உள்ளார்ந்த பிணைப்பு இருப்பதை அக்கறையுள்ள எந்த வாசகனும் காண்பான். இந்தப் பிணைப்பு, நாவலின் வெளிப்புறக் கட்டுக்கோப்பை விட உறுதியானது.
சுநீல் கங்கோபாத்யாய அடிப்படையில் ஒரு கவி. கவிக்குரிய அனுதாபம் அவரது இந்த நாவலிலும் வெளிப்படுகிறது. 'ஆத்மப்ரகாஷ்' (தன்வெளிப்பாடு) ஒரு கவியின் படைப்பு. நாவலாசிரியர் தம் பெயர் கொண்ட கதாநாயகன் மூலம் தம் வேதனை நிறைந்த ஆளுமையை வெளிப்படுத்துகிறார்.
Be the first to rate this book.