"சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை
துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்" என்கிறார் ஜெயமோகன். அதற்கு சரியான எடுத்துக்காட்டு அவரது 'தண்ணீர்'
நாவல். நதியின் பரபரப்பான வேகமின்றி, சிறு ஓடை ஒன்றின் பாம்பின் ஊர்தல் போல நாவல் மெதுவாக நகரத் தொடங் குகிறது. ஆனால் போகப்போக கீழே வைத்துவிட முடியாதபடி வேகம் கொண்டு நாவல் பிரவகிக்கிறது. பிரச்சினை நாம்
தினசரி வாழ்வில் எதிர் கொள்வதுதான். தண்ணீர்ப் பிரச்சினை - நாவலில் காட்டப்படும் களமான சென்னை என்றில்லாமல் இப்போது நாடு முழுதும் - ஏன் உலகம் முழுதும் வியாபித்துள்ளது. இது சென்னை போன்ற பெரு நகரங்களில்
மிகவும் கூர்மையாக மக்களின் உறவுகளைப் பாதிப்பதாக இருப்பதை - பார்ப்பதற்குத் துளியாகத் தோன்றினாலும் ஒருபெரு வெள்ளத்தைப்போல் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதைக் குறியீடாக நாவல் சித்தரிக்கிறது.
Be the first to rate this book.