எகிப்தில் நைல் நதிப் பள்ளத்தாக்கில் இருந்து லிபியப் பாலைவனத்தைப் பிரிக்கிற ஒரு கோட்டின் மீது நான் நின்று கொண்டிருந்தேன். அந்த நாளை மீண்டும் நினைவு கூர்கிறேன். ஒருபுறம், பார்வைக்கு எட்டியவரை, கடல் போன்று பரந்து விரிந்த மணற்பரப்பின் மீது ஒரே ஓர் உயிரினம் கூடத் தென்படவில்லை. ஒரு புல் பூண்டு கூட வளராமல் பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனம் அது; அதற்கு நேரெதிரே மறுபுறம் புவிப் பரப்பின் மீது காணக்கிடைக்கும் மாபெரும் உயிரிச் செறிவுமிக்க பகுதி. அங்கே செழுமையான பசுந்தாவர வகைகளும், உயிரினங்களும் நிறைந்த பசுஞ்சோலைகள். இந்த அற்புதமான வேறுபாட்டை உருவாக்கியது எது? வேறெது. வெறும் தண்ணீர் மட்டுமே!
கடந்த பல ஆண்டுகளாகவே பருவமழையின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. அப்படியே சில பகுதிகளில் மழையளவு குறையாமல் வழக்கம்போல் பெய்தாலும், அந்த மழை நீரை சேகரிப்பதற்கான எந்த நடைமுறை ஏற்பாடும் இல்லாததால், எவ்வளவு மழை பெய்தாலும் அவ்வளவும் பேசாமல் விட்டு விடப்படுகிறது அல்லது சாக்கடை நீராகிப் போகிறது. ஆண்டு முழுவதும் மழை பெய்துகொண்டிருந்த சிரபூஞ்சியிலேயே வறட்சி நிலைமை உருவாகிவிட்டது குறித்துப் படிக்கிறோம்.
Be the first to rate this book.