வியாபாரம் மலிந்துவிட்டது. பொறாமை பூத்துவிட்டது. தஞ்சாவூர் வாழ்வின் பண்பாடு மறைந்து புதுப்புது வாடைகள் வீசுகின்றன. ஜானகிராமன் போய்ச் சேர்ந்துவிட்டார். அற்புதமான ரசிகராய் வாழ்ந்த அவர் மட்டுமல்ல; அவர் வாழ்ந்த வாழ்வின் சாரங்களும் இன்றில்லை. ஆனால், ‘மோகமுள்’ இருக்கிறது. எத்தனைக் காலம் ஆனாலும் அது அழியாது. தன் பண்பை, தஞ்சாவூரின்
விளைச்சலை, சங்கீதத்தின் சாரத்தை, மோகத்தின் வேகத்தை அப்படியே தாக்குப்பிடித்து எதிர்வரும் சந்ததிக்கு மாற்றிக்கொண்டே இலக்கிய வாழ்வை நிலைநிறுத்தும். ஆம், ஜானகிராமனின் தஞ்சாவூர் இன்றும் அதில் என்றுமாய் நிலைபேறு பெற்றுவிட்டது.
- தஞ்சை ப்ரகாஷ்
Be the first to rate this book.