கேளிக்கைப் பொருளாய்
மதுப்புட்டிக்குள் அடைக்கலமாகிறது பேச்சு
சொற்கள் குழறத் தொடங்கும் பொழுதில்
தோழியை அழைக்கிறீர்கள்
நட்பின் பெயரால் அழைப்பை ஏற்கும்
அவளுக்குத் தெரியாது
தன் குரல் அனைவருக்கும் பரிமாரப்படுகின்றதென்று
மெதுவான தாள லயத்துடன் தொடங்கும் இசை
நேரம் செல்லச்செல்ல முறுக்கேறுகிறது
குரல்கள் தடிக்கின்றன
வார்த்தைகள் குழறி மோதுகின்றன
தட்டில் இருக்கும் சிப்ஸும் மிக்சரும் போதாமல்
தோழியின் கதைகளைப் பேசுகிறீர்கள்
நம்பிக்கையோடு சொல்லப்பட்ட ரகசியங்கள்
அற்ப சுவாரசியத்துக்காக பகிரப்படுகிறது
எழுதும் கைகளின் தகர வக்கிரங்கள்
கிறுக்கப்படுகின்றன சுவரெங்கும்
நேசிக்கும் புத்தகங்களை இறுகப் பற்றியபடி
சங்கிலியில் கட்டுண்டிருக்கும் கால்களை அறியாமல்
உறங்கச் செல்கிறாள்
தானே உணவானது அறியாமல்
Be the first to rate this book.