பொதுவாக, கமலாலயனின் கதாபாத்திரங்கள் வாழ்வின் நெருக்கடியில் நசுங்கி, எதிர்பார்ப்பில் ஏமாந்து, ஏமாற்றத்தில் மனம் வாடி, கணநேர உணர்ச்சிகளின் சுழலில் தங்களை இழக்கிறார்கள். ஆனால் எல்லாருமே அந்தந்த நிலையிலிருந்து மீண்டு விடத் தயாராகவே இருக்கிறார்கள். அனைவருமே மென்மையான உள்ளம் கொண்டவர்கள்தாம். தாங்கள் இப்படி மாறி விட்டோமே என்று உடனே உணர்ந்து கொள்பவர்கள்தாம். வெறுமனே வாழ்க்கை மீது மட்டும் பழி போடாமல் தங்களை மீளவும் உணர்கிறார்கள். அந்த வகையில் இந்தச் சாதாரண மனிதர்கள் அசாதாரணமான உயர்ந்தவர்களாகிறார்கள்.
காட்சிச் சித்தரிப்பில் கமலாலயனின் கதைகள் தனிக்கவனம்பெறுகின்றன. கீழ்வெண்மணி கிராமத்தில் நடந்த கொடூரமான நிகழ்வினையும், அதில் உயிர்நீத்த தியாகிகளைப் பற்றியும் இன்னும் எத்தனை படைப்புகளில் எழுதினாலும் தீராது, முற்றிலும் வேறான கோணத்தில் எழுதப்பட்ட கதை.
- உதயசங்கர்
Be the first to rate this book.