பிறழ்வெழுத்து என்னும் எழுத்துமுறையின் இந்திய அளவிலான முதல் உதாரணம் சாரு நிவேதிதா. எழுத்து, எழுத்தாளன் என்னும் உருவகங்களை உடைத்து விளையாட்டென நிகழும் எழுத்து அவருடையது. எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாத எழுத்து. பின்நவீனத்துவ காலகட்டத்தின் இலக்கியவாதி அவர். புனைவு, உண்மை என்னும் இரண்டு எல்லைகளைக்கூட அழித்துச்செல்வது அவருடைய எழுத்துலகம். அத்தகைய எழுத்து என்பது கோட்பாட்டு அலசல்களுக்கு, கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளுக்கு முற்றிலும் எதிரானது அவர்களால் எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாதது. அவர்கள் தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் அதன்மேல் சுமத்த, அதையெல்லாம் உதறி நிர்வாணமாக முன்சென்றுகொண்டிருப்பது. அவர்களை தன் எளிமையாலெயே தோற்கடிப்பது. ஆனால் வாசிக்கும்போது தன்னையும் சாரு நிவேதிதா போல நிர்வாணமாக ஆக்கிக்கொள்ளும் வாசகன் அதை எளிதில் தொட்டு அறியமுடியும். ஏனென்றால் சாருவின் எழுத்துக்கள் அவர்களை நோக்கியே எழுதப்பட்டுள்ளன. அத்தகைய வாசிப்புகள் அடங்கிய தொகுதி இது. சாரு நிவேதிதா 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை பெறுவதை ஒட்டி இந்நூல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பால் வெளியிடப்படுகிறது.
Be the first to rate this book.