லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் புகழ்பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' என வெளிவந்துள்ளது. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும் படைப்புகளில் ஒன்று. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்நாவல் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது. ஒரு நகரத்தின் நூறு ஆண்டுத் தனிமையையும் ஒரு மக்கள் கூட்டத்தின் தனிமையான நூறு ஆண்டுகளையும் சொல்லுகிறது இந்த நாவல்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நாவல் இன்றும் புதிய வாசகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் காலத்தை மீறிய படைப்பு. எந்த மொழியில் பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியைத் தாண்டி நிலைத்திருக்கும் மானுடக் கதையாடல்.
Be the first to rate this book.