தமிழ்த் திரையிசையின் செல்வாக்குக்கு ஆட்படாத தமிழர்கள் இருக்க முடியாது. திரையிசை என்ற ஆலமரத்தின் எதிரே தனியிசை (independent music) ஓர் எதிர்க்கலாச்சாரமாக வேகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய சூழலில் திரையிசை, தனியிசை, மாற்று இசை ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு மெலிதாக உள்ளது. இதில் தூய்மைவாதம் எதுவுமில்லை; எனினும் தனியிசை வேறு தளம். திரையிசை மட்டும் தமிழ்நாட்டின் இசை இல்லை என்கிற நிலை மாறி, தனியிசையும் அதன் அங்கமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. இந்தப் பின்னணியில் தமிழ்த் தனியிசையின் தொடக்கம், எழுச்சி, அதன் இன்றைய போக்கு, எதிர்கால நிலை ஆகியவற்றை பற்றிய திறந்த உரையாடலுக்கான தேவை எழுகிறது. அந்த வகையில் காலத்தின் குழந்தையாக இந்நூல் உருவாகியிருக்கிறது.
திரையிசையின் சுருக்கமான வரலாற்றில் தொடங்கி தனியிசை எப்படி திரையிசையுடன் பயணிக்கத் தொடங்கியது, சில ஆரம்பக்கால தனியிசைக்குழுக்கள், அவர்கள் உருவாக்கிய இசை போன்ற அம்சங்களை இந்நூல் விவரிக்கிறது. மேலும் தனியிசையின் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள், தனியிசை எதிர்க்கலாச்சாரமாக உருவெடுக்கும் போக்கு, இதன் முக்கியமான ஆளுமைகள், திரையிசையின் தற்போதைய நிலைமை, தனியிசை முறைசாராத் தொழிலாக இருக்கும் நிலை ஆகியவற்றையும் இந்நூல் ஆராய்கிறது. இறுதியாக, தனியிசையின் அழகியலைச் சொல்லி தனியிசை கேட்க உங்களை அழைத்துச் செல்ல விழைகிறது.
Be the first to rate this book.