ஷானின் கதைகளில் வரும் உயிரோட்டமுள்ள கதாப்பாத்திரங்கள் வாழ்வின் வெவ்வேறு புள்ளியிலிருந்து அர்த்தத்தைத் தேடுகின்றன. அர்த்தங்களைத் தேடுபவர்கள்முடிவுகளை எடுக்கிறார்கள்.
பெண்டுலத்தின் இரு மருங்கிலும் வெவ்வேறு கதைகளாக தங்கம், அஞ்சலி, இளவரசன், சாத்தானின் மடி என்கிற கதைகளை வைக்க முடியும். தன் கையில் இல்லாத முடிவுகளைக் கொண்டிருந்தாலும் அலைவுறும் வாழ்க்கையிலும் ஸ்திரமாக நிற்கின்றன தங்கம், கனகாம்பரம், அஞ்சலி உள்ளிட்ட கதைகளின் பாத்திரங்கள். ‘சாத்தானின் மடி’ போன்ற கதைகள்நிஜத்திலும் இப்படி மாறியிருந்தால் நன்றாக இருக்கும் என்று வாசகனைஏங்க வைக்கின்றன. கண்ணீர் சிந்தவைக்கின்றன. அதனால் தான் தங்கம் சிறுகதை திரைப்படமாக்கப்பட்டு பாவக்கதைகளின் ஒன்றாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
Be the first to rate this book.