திரைப்படம் ஒரு பொழுதுபோக்குக் கலையாக இருக்கிறது. ஆனால் அதன் பொழுதுபோக்கு அம்சங்களைக் கடந்து, நம் வாழ்வின் அங்கமாகவும் இருக்கிறது. தனிநபரின் வாழ்விலும், சமூக வாழ்விலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.
நம் உணர்வு நிலையில் ஆதிக்கம் செலுத்தும் திரைப்படம் குறித்து நமக்கு என்ன விதமான பார்வை இருக்கிறது? ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறதா?
கதைக்கும் கதை மாந்தர்களுக்கும் இடைவெளி உணரப்படாத காலத்தில், நாடகமும் திரைப்படமும் தேசிய அரசியலில் எவ்விதம் கோலோச்சின?
தமிழ் நாடக இயக்கம் தொடங்கி, தொடக்கக் கால திரைப்படங்கள் வரை, கி.பி.1880 முதல் 1945 வரையான காலகட்டம் குறித்த மிக முக்கியமான புத்தகம்.
Be the first to rate this book.