இந்த அபூர்வமான புத்தகத்தில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச் சமாளித்துக்கொள்ளப்போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார். இவை நினைத்துப் பார்க்கமுடியாதவாறு விநோதமாக இருக்கின்றன; ஒளிமிக்க இக்கதைகள் மனிதராக இருப்பதன் பொருள் என்ன என்பதை வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன.
ஆலிவர் சேக்ஸ் உலகின் மிகப் பிரபலமான நரம்பியல் வல்லுநர். உடைந்துபோன மனங்கள் பற்றிய அவரது நிகழ்வு அறிக்கைகள் நனவுநிலையின் புதிர்களுக்குச் சிறப்பான உள்ளொளி தருகின்றன.
- கார்டியன்
உள்ளொளியுடன் கருணையுள்ளத்தையும் காட்டுகிறது; மனத்தை நெகிழச்செய்கிறது... திறமைமிக்க கதை சொல்லியின் தெளிவுடனும் ஆற்றலுடனும் இந்த வரலாறுகளைத் தருகிறார்... மருத்துவம் தொடர்பான நூலில் இது ஒரு மகத்தான படைப்பு.
- நியூ யார்க் டைம்ஸ்
Be the first to rate this book.