சமகால அரசியல் நடப்பைக் கூர்மையாகக் கவனித்து இன்றைய தலைமுறைக்கு எது சரி, எது தவறு என்று ‘தம்பிக்கு’ நூலின் மூலம் திட்டவட்டமாய் எடுத்துரைக்கிறார் சரவணகுமார். அறிஞர் அண்ணாவின் கடித வழி முறையைப் பின்பற்றி இன்றைய தலைமுறையினருக்கு, அரசியல் ஆகட்டும் அல்லது திராவிட இயக்கக் கொள்கை ஆகட்டும், சமகால அரசியலில் அவருடைய கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதாகட்டும் இவற்றையெல்லாம் மிக அழகாக இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். முகப்பில் அண்ணா படமும், உள்ளிருக்கும் எழுத்துகள் அண்ணாவின் நடையில் ஒத்திருந்தாலும், இதனுடைய பேசுபொருள் சமகால நடப்புகளை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்வதாக இருக்கிறது. திராவிட இயக்கம் தந்த பங்களிப்புகளை, திராவிட முன்னோடிகள் இந்த மண்ணுக்கு அளித்த பங்களிப்புகளை, ஊட்டிய சுயமரியாதைச் சிந்தனையை, பகுத்தறிவை, சமூகநீதி சிந்தனையை இந்தத் தலைமுறை தொலைத்துவிடக் கூடாது எனும் ஆதங்கத்தோடு எழுதப்பட்ட நூல் இது.
Be the first to rate this book.