'தாமரைக்குளம்' என்று அழைக்கப்படும் அந்தப் பெரிய மாளிகை ஒரு காலத்தில் மிகவும் பிரபலமானது. நாட்டையாண்ட மன்னர்களின் மந்திரிப் பிரதானிகள் வாழ்ந்த இடம் இது.
வெளிநாட்டுக்காரர்கள் இங்கே வந்து பலரைக் கிறிஸ்தவ மதத்தினராக மாற்றியபோது, ஒரு பிரபல நம்பூதிரி குடும்பமும் அந்த வலையில் வீழ்ந்தது. அந்த நம்பூதிரியின் குடும்பம் மந்திர தந்திரங்களில் நல்ல பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். பலவிதமான மாந்திரீக கிரந்தங்கள் அந்த மாளிகையில் இருந்தன. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 'யூதா' என்பவர் மிகப்பெரிய மந்திரவாதியாகத் திகழ்ந்தார். பலவிதமான துர்மந்திரங்களைப் பிரயோகப்படுத்தியதால் யூதாவைக் கண்டு மக்கள் பயந்தனர்.
Be the first to rate this book.