'தாமரை பூத்த தடாகம்' என்ற இந்த நூல் தமிழுக்குப் புதிதும் அரிதுமான சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. சுயமான பார்வை, புதிய சொல்லாடல், அனுபவம் சார்ந்த உண்மையான அக்கறை, வசீகரிக்கும் மொழிநடை என பல சிறப்பான அம்சங்கள் பொருந்திய நூல்.
தமிழில் சுற்றுச் சூழல் குறித்து எழுதுவோர் மிகக் குறைவு. அதிலும் வெகுஜன ஊடகங்களில் சாதாரண மக்களை சென்றடையும் விதம் எழுதுவோர் இன்னும் குறைவு. தியடோர் பாஸ்கரன் இந்த அரிய செயலைத் திறம்படச் செய்கிறார். தி. பாஸ்கரனின் ஆழ்ந்த தமிழறிவு இந்தக் கட்டுரைகளைத் தரமான இலக்கியமாக மாற்றுகிறது. இயற்கைச் சூழலைப் பற்றிய எழுத்துக்கள்பெரும்பாலும் வறட்சியான நடையிலான பூரண அறிவியல் எழுத்துக்களாய்த் தான் இருக்கின்றன. தி. பாஸ்கரனின் எழுத்து இந்த நடைமுறைக்கு விதிக்கு ஒரு நல்ல விதிவிலக்கு. சூழியல் குறித்த கட்டுரைத் தொகுப்பு என்றாலும் இந்த நூல் நல்லதொரு இலக்கியத்தை வாசித்த அனுபவத்தையும் வழங்குகிறது.
Be the first to rate this book.