இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா, ரேவதி, வஸந்த் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார் தி. குலசேகர். இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். திரைமொழியின் மீதுள்ள தீராத காதலினால் உயிர்த்திருக்க முடிந்திருப்பதையே தனக்கான தவமும்வரமும் என்கிறார். உலகத் தரத்திற்குரிய அதே சமயம் உலகளவில் ரசிக்கப்பட்ட திரைக்காவியங்களை தேர்ந்தெடுத்து, திரைமொழி நுட்பத்துடன் இலக்கியமாக்கியிருக்கிறார். இந்த முயற்சி,தமிழின் திரைப்படைப்புகளை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு உந்துவிசையாக இருக்கும் என்கிற நம்பிக்கையின் பரவசிப்பே இந்த நூல் உருவாவதற்கான காரணம் என்கிறார்.
Be the first to rate this book.