துயரம் விரிந்து பரந்தடர்ந்து கிடக்கும் ஓர் நிலத்திலிருந்து தொடர்ந்து எழுகிற எண்ணற்ற கவிதை குரல்களில் இன்னொன்றாக றஹீமாவின் குரல் ஒலிக்க துவங்கியிருக்கிறது. கவிதை தனக்கென எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை,கட்டளைகளையும் வழங்குவதில்லை.இந்த ஒற்றை வரம் தரும் நம்பிக்கை பலதரப்பட்ட கவிதை குரல்களுக்கும் அடிப்படை அச்சாணியாக இருக்கிறது. மொழியையும் பார்வையையும் கூர் தீட்டி, அன்றாட வாழ்வின் அவலங்களையும் , நிலைத்த போரின் வதைபாடுகளையும், , உணர்வு நிலைகளின் சாய்மானங்களையும் , எழுத தவித்து எழுதி முடித்த றஹீமா பைஸல் சுட்டுகிற ஆப்பிரிக்க பழமொழி போல இந்த மான்கள் பேசட்டும் , தங்களைப் பற்றி மட்டுமல்ல வேட்டைக்காரர்கள் பற்றியும் அவை பேசட்டும், இயலுமெனில் அவர்கள் வேட்டையாடுவதை பற்றியும் பேசட்டும். வேறு யார் பேச முடியும்?
- சல்மா
Be the first to rate this book.