”ஆனால் ஆனந்தன் அறிந்த வரை பிரேமிடம் மூன்று நூல்கள் மட்டுமே இருந்தன, மிலோராத் பாவிக்கின் நாவலில் வருவது போன்ற மூன்று நூல்கள் அல்ல அவை. அவை மிக எளியவை. மூன்று நூல்களின் தாள்களும் வெற்றுப் பக்கங்களாக இருப்பவை. அவை மூன்று நிறத்தாள்களாக இருக்கும். சிவப்பு, கருப்பு, நீலம் என அமைந்த அந்த வெற்றுக் காகிதங்களைக் கொண்ட புத்தகங்களை எடுத்து நண்பர்கள் கேட்கும் நூலின் பங்கங்களை அவன் வாசித்துக் காட்டுவான், பிறகு விளக்கமும் சொல்வான். அவர்களும் அவன் வாசிப்பதை மூளையிலோ தாள்களிலோ குறிப்பெடுத்துக் கொண்டு செல்வார்கள். பல நூலகங்களில் இருந்து அவ்வப்போது அவன் கொண்டு வரும் நூல்கள்தான் அவை என நண்பர்கள் நினைத்துக்கொண்டார்கள்.“
Be the first to rate this book.