உலக இலக்கியங்களில் சில இலக்கியத் தரத்திற்காக மட்டுமின்றிச் சர்ச்சைக்காகவும் அதிகமாக அறியப்பட்டிருக்கின்றன. விளாடிமர் நோபொகோவின் ‘லோலிடா’ நாவலைப் போல. இத்தகைய நாவல்களையும் அவை குறித்த சர்ச்சைகளையும் பற்றிய விரிவான அலசலே இந்நூல்.
‘லோலிடா’, ஜே.டி. சாலிங்கரின் ‘கேச்சர் இன் த ரை’ மாயா ஏஞ்சலூவின் சுயசரிதை, ஃப்ரன்ஸ் கஃப்காவின் ‘உருமாற்றம்’, ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘விலங்குப் பண்ணை’, ஆனி ஃப்ராங்கின் ‘ஒரு சிறுமியின் நாட்குறிப்பு’, டான் பிரவுனின் ‘டாவின்சி கோட்’ என 20க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற உலக இலக்கியங்களைப் பற்றிய விரிவான சித்திரங்களை இந்நூலில் காணலாம்.
ஆங்கில இலக்கியத்தில் விரிவான வாசிப்புக் கொண்ட வாஸந்தி இந்த நாவல்களின் கதைகளையும் சர்ச்சைகளையும் இந்நூலில் விவாதிக்கிறார். இலக்கிய ரசனையுடன் ஒவ்வொரு படைப்பையும் அணுகியிருக்கிறார்.
Be the first to rate this book.