'அழகி', 'தென்றல்' போன்ற திரைப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் 'சொல்ல மறந்த கதை' திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.
மனிதனின் அக வேட்கைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளிகளை சமன் செய்வதே வாழ்வின் சவால். 70களில் கிராமப்புற பட்டதாரி இளைஞர்கள் உறவுகள் சார்ந்தும் நிலம் சார்ந்தும் எழுந்த நிர்பந்தங்களுக்கு தமது சுயத்தை இழக்க நேரிட்டது. ஆனால் இன்றைய கணினியுக இளைஞர்கள் தனி அடையாளங்களை இழந்து பொது அடையாளங்களுக்குள் தங்களது இருப்பை பத்திரப்படுத்திக் கொள்கின்றனர். 'தலைகீழ் விகிதங்கள்' நாவலை இன்று படிக்கும்போது நேற்றைய தலைமுறையினரின் அகப் போராட்டங்களின் வழியாக, இன்றைய இளைஞர்களின் மனச் சிக்கல்களை நம்மால் அக்கறையுடன் அனுசரணையுடன் புரிந்துகொள்ள முடிகிறது. கூடவே, நவீன வாழ்வின் அபத்தங்களையும் அதன் இலக்கறியா பயணங்களையும்.
Be the first to rate this book.